உணவு வழிகாட்டி புகைப்படம்

Figure 1. Text version below.

உணவு வழிகாட்டி புகைப்படம் - விளக்கம்

கனடாவின் உணவு வழிகாட்டி.

நன்றாக உணவருந்தி நல்வாழ்க்கை வாழுங்கள்.

உணவு வழிகாட்டி புகைப்படம் இரண்டு படங்கள் காட்டப்பட்டுள்ளன. அவற்றில் முதலாவது படமானது தண்ணீருடனான தண்ணீர்க் குவளை மற்றும் உணவுடனான உணவுத்தட்டையும் காட்டுகின்றது. இந்த அறிக்கையானது மேலே காட்டப்பட்டுள்ளது.

தினமும் ஆரோக்கியமான பல்வேறு உணவுகளை உட்கொள்ளல்.

உணவுத் தட்டானது நான்கு தகவல்களை எமக்கு வழங்குகின்றது, அவையாவன

  • நிறைய பழங்கள் மற்றும் மரக்கறி வகைகளை உட்கொள்ளல்.
  • முழு தானிய உணவுகளைத் தேர்வு செய்தல்.
  • புரத உணவுகளை உட்கொள்ளல்.
  • தண்ணீரை உங்கள் முக்கிய பானமாக தேர்வு செய்யவும்.

உணவுத்தட்டில் ஓர் பாதி , மரக்கறிகள் மற்றும் பழங்கள் (ப்ரொக்கோலி, கரட், அவுரிநெல்லி, ஸ்ட்ராபெரி, பச்சை மற்றும் மஞ்சள் பெல் மிளகு, ஆப்பிள், சிகப்பு கோவா, கீரை, தக்காளி, உருளைக்கிழங்கு, ஸ்குவாஷி மற்றும் பச்சைப்பட்டாணி).

அவ்வுணவுத்தட்டில்; கால் பகுதி புரத உணவு வகைகள்; (மெலிந்த இறைச்சி, கோழி, பருப்பு மற்றும் விதைகள் ,பயறு, முட்டை, டோபு (Tofu), தயிர், மீன், போஞ்சி).

மீதமுள்ள கால் பகுதி உணவுத்தட்டில் எல்லாத் தானிய உணவுகளும் (முழுத் தானியம் அடங்கிய பாண்,முழுத்தானியம் அடங்கிய பஸ்டா ,காட்டு அரிசி,சிகப்பு கினோவா,சிகப்பரிசி).

இரண்டாவது படத்தில் ஏழு பெட்டிகள் காண்பிக்கப்பட்டுள்ளன அவையாவும் அதற்குரிய தகவல் மற்றும் அதற்கான படங்களை காட்டுகின்றன.

இந்த அறிக்கையானது மேலே காட்டப்பட்டுள்ளது.

நீங்கள் உண்ணும் உணவை விட ஆரோக்கியமான உணவை அதிகம் உண்ணுங்கள்.

முதல் பெட்டியில் நீங்கள் உண்ணும் உணவையும், பழக்கத்தையும் கவனத்தில் கொள்ளுங்கள் என கூறப்பட்டுள்ளது.

அந்தப்படத்தில் இரு பெரியவர்கள் ஒன்றாக இருந்து காலை உணவு உட்கொள்கின்றனர்.

இரண்டாவது பெட்டியில், அடிக்கடி சமைக்கவும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆந்தப் படத்தில் ஒரு பெரியவரும் ஒரு குழந்தையும் ஒன்றாக சேர்ந்து சமைப்பது போல் காட்டப்பட்டுள்ளது.

ழூன்றாவது பெட்டியில், நன்றாக உணவை சுவைத்து உண்ணுங்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

அந்தப் படத்தில் ஒரு பாத்திரத்தில் உணவு இருப்பது போல் காட்டப்பட்டுள்ளது.

நான்காவது பெட்டியில், மற்றவர்களுடன் சேர்ந்து உணவை உட்கொள்ளுங்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

அந்தப் படத்தில் ஒரு குழு தங்கள் உணவுகளை மற்றவர்களுடன் பகிர்வது போல் காட்டப்பட்டுள்ளது.

ஐந்தாவது பெட்டியில், உணவு லேபிள்களை பயன்படுத்தவும் எனக் கூறப்பட்டுள்ளது.

அந்தப் படத்தில் ஒருவரின் இரு கரங்களிலும் இரு உணவு கேன்கள் இருக்கின்றன ,அந்த கேன்களில் ஊட்டச்சத்து சம்பந்தமான அட்டவணையும் காண்பிக்கப்படுகின்றது.

ஆறாவது பெட்டியில், அதிக சோடியம், சர்க்கரை அல்லது நிறைவுற்ற கொழுப்பு உணவுகளை குறைத்து உட்கொள்ளுங்கள்; எனக் கூறப்பட்டுள்ளது.

அந்தப் படத்தில் மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவுகளான சுட்ட பொருட்கள், பீஸா, மென்பானம், சொக்கலேட் மற்றும் (Hot dog) கொட்டோக் போன்றவை காட்டப்பட்டுள்ளன.

ஏழாவது பெட்டியில், உணவு விற்பனையில் விழிப்பாய் இருத்தல் எனக் கூறப்பட்டுள்ளது.

அந்தப் படத்தில் ஒரு மனிதர் ஓர் உணவு பற்றிய விளம்பரத்தை தன்னுடைய கையடக்கத் தொலைபேசி மற்றும் கணனித் திரையில் பார்ப்பது போல் காட்டப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையானது கீழ்பகுதியில் காட்டப்பட்டுள்ளது.

நன்றாக உணவருந்தி நல்வாழ்வு வாழுங்கள்.

Page details

Date modified: