ரெயின்போ ரயில்பாதை கனடா

புகலிடம் என்பது பாதுகாப்புக்கான இன்னொரு சொல். “புகலிடம் நாடுதல்” என்றால் அகதிப் பாதுகாப்பு கேட்பதாக அர்த்தம்.

கனடாவின் தஞ்சம் வழங்கும் முறை துன்புறுத்துதலுக்கான ஆதார பயம் காரணமாக தங்கள் நாட்டைவிட்டு வெளியேறுவோருக்கு உதவுகிறது. இதன் அர்த்தம் தங்கள் தாய்நாட்டுக்குத் திரும்பிச் செல்வது ஆபத்தை ஏற்படுத்துமென்றால் சிலரால் அகதிப் பாதுகாப்பு வேண்டுமென கேட்க முடியும்.

அடைக்கலம் கோருவதனால் மட்டுமே நீங்கள் கனடாவில் தங்கும் உத்தரவாதம் கிடைக்காது. குடியேற்ற விதிகள் மற்றும் நடைமுறைகளைக் கடப்பதற்கான ஒரு சுருக்கமான வழி இதுவாகும். உங்கள் வாழ்வை மாற்றக்கூடிய முடிவை எடுக்கும் முன்பாக நீங்கள் என்ன தெரிந்துகொள்ள வேண்டுமென்பதைக் கண்டறியுங்கள்.

இந்தப் பக்கத்தில்

அகதிப் பாதுகாப்பை யார் கோரலாம்

உங்கள் தாய்நாட்டுக்குத் திரும்பிச் செல்வதால் துன்புறுத்தப்படுதல், உயிர் ஆபத்து, அல்லது குரூரம் குறித்த அபாயம் வழக்கத்துக்கு மாறாக நடத்தப்படுதல் அல்லது தண்டனை ஆகியவற்றுக்கான அபாயம் இருப்பதாக உங்களால் நிரூபிக்க முடிந்தால் அகதிப் பாதுகாப்பை நீங்கள் கோரலாம்.

குடியேறியவரிலிருந்து தஞ்சமடைந்தவர் மாறுபட்டவர். ஒரு குடியேறியவர் வேறொரு நாட்டில் நிரந்தரமாக வசிக்கத் தேர்ந்தெடுத்தவர். தஞ்சமடைவோர் தங்கள் பாதுகாப்புக்காக வெளியேறும் கட்டாயத்தில் இருப்போர்.

கனடாவின் தஞ்சம் வழங்கும் முறை

உங்கள் வாழ்க்கையை அபாயத்துக்கு உள்ளாக்கும் முன்பாக கனடாவின் தஞ்சம் வழங்கும் முறை குறித்த உண்மைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.

  • தஞ்சம் வழங்கும் முறையைப் பயன்படுத்துவது கனடாவுக்குள் உங்கள் குடியேற்றத்தை விரைவுபடுத்தும் ஒரு வழி அல்ல.
  • புகலிடக் கோரிக்கைகளை நாங்கள் தானியங்கி முறையில் ஏற்பதில்லை.
  • புகலிடம் நாடுவோர் கடுமையான தகுதிச் சோதனைக்கு உட்படுத்தப்படுவர்.
  • உங்கள் புகலிடக் கோரிக்கை ஏற்கப்படும் என்பதற்கு யாரும் உத்தரவாதம் அளிக்க இயலாது. அது நிராகரிக்கப்பட்டால் நீங்கள் கனடாவிலிருந்து அகற்றப்படுவீர்கள்.
  • நிலையான வேலை அல்லது உங்கள் குழந்தைக்கு சிறந்த கல்வி பெறுவது ஆகியவை புகலிடம் கோருவதற்கான ஒரு காரணம் அல்ல.

உங்களுக்கு கனடாவின் பாதுகாப்பு தேவையில்லை என நாங்கள் கண்டறிந்தால், நீங்கள் கனடாவிலிருந்து அகற்றப்படுவீர்கள்.

அபாயங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்

யாராவது உங்களை கனடாவுக்குக் கொண்டு வருவதற்கு பணம் செலுத்தும்படி கேட்டால் அதை நம்பாதீர்கள். அவர்கள் ஆபத்தானவர்களாக உங்கள் உயிரை அபாயத்துக்கு உள்ளாக்குபவர்களாக இருக்கலாம்.

கனடாவில் அடைக்கலம் கோருவது குறித்து பொய்யான அல்லது தவறாக வழிநடத்தும் தகவல்களை வழங்குவோர் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். புகலிடக் கோரிக்கைகள் தானாகவே ஏற்கப்படாது. உங்கள் புகலிடக் கோரிக்கை ஏற்கப்படும் என்பதற்கு யாரும் உத்தரவாதம் அளிக்க இயலாது.

யாரோ ஒருவர் தரும் தவறான வாக்குறுதிகளையும் பொய்களையும் நம்பி ஆபத்தை மேற்கொள்ளாதீர்கள்.

பொய்யாகப் புகலிடம் கோரினால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்:

  • கனடாவுக்குத் திரும்பி வருவதிலிருந்து நீங்கள் தடைசெய்யப்படக்கூடும்.
  • வருங்காலத்தில் உங்கள் குடும்பம் கனடாவுக்கு வர முடியாமல் போகலாம்.

நில எல்லை, விமான நிலையம் அல்லது துறைமுகம் வழியாக நீங்கள் கனடாவுக்குள் நுழைய வேண்டும். அதிகாரப்பூர்வ நுழைவிடங்கள் தவிர்த்து வேறு எங்கிருந்தும் கனடாவின் எல்லையைத் தாண்டுவது மிக அபாயகரமானதும் சட்டத்துக்குப் புறம்பானதும் ஆகும்.

புகலிடம் நாடுதல்

கனடிய மற்றும் சர்வதேசச் சட்டங்களின்படி அகதிப் பாதுகாப்புக்கான முறைப்படியான தேவை உங்களுக்கு உள்ளதான் எனத் தீர்மானிக்கக் கடுமையான நடைமுறை உள்ளது.  எங்கள் விதிகள் அடிப்படையிலான அமைப்பு உங்கள் கோரிக்கை சரியானதா எனத் தீர்மானிக்கும். அனைத்துக் கோரிக்கைகளும் ஏற்கப்படுவதில்லை எனப் புரிந்துகொள்வது முக்கியம்.

நீங்கள் கனடாவில் புகலிடம் கோருவதாயிருந்தால், நீங்கள் செய்ய வேண்டியது

  • உடல்நலம், குற்றம், பாதுகாப்பு மற்றும் பிற பின்புலச் சோதனைகளுக்கு உட்படுதல்
  • மருத்துவப் பரிசோதனை பெறுதல்
  • தனிப்பட்ட மற்றும் பயோமெட்ரிக் (புகைப்படம் மற்றும் விரல் ரேகைகள்) தகவல்களை வழங்குதல்
  • உங்கள் தாய்நாட்டில் இருப்பதால் ஏற்படும் துன்புறுத்தல் மற்றும் அபாயத்துக்கான உறுதியான ஆதாரத்தை வழங்குதல்
  • நீங்கள் பிரதிநிதியுடன் செயல்படுகிறீர்களா என்பதை நீங்கள் அவருக்கு அதற்காகப் பணம் அளிக்காவிட்டாலும் உங்கள் விண்ணப்பத்தில் அறிவித்தல்

தவறான தகவல்களை உங்கள் தஞ்சம் அடைதல் கோரிக்கை விண்ணப்பத்தில் வழங்குவது பொய்யாகக் கருதப்பட்டு உங்கள் விண்ணப்பம் நிராகரிக்க ஏதுவாகும்.

நீங்கள் அமெரிக்காவில் (US) இருந்து கனடாவுக்குள் நுழைகிறீர்கள் என்றால், அடைக்கலக் கோரிக்கைக்கு நீங்கள் தகுதி பெற மாட்டீர்கள். அமெரிக்காவுக்குத் திருப்பி அனுப்பப்படுவீர்கள். கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலுள்ள பாதுகாப்பான மூன்றாம் நாடு ஒப்பந்தத்தின்படி (STCA), நீங்கள் நுழையும் முதல் நாட்டில் அடைக்கலத்துக்கு நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும்; கோரிக்கை விடுப்பதற்காக நீங்கள் இன்னொரு நாட்டின் எல்லைக்குள் வரக்கூடாது.

STCA குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

முறையான கோரிக்கை இல்லாவிட்டாலோ அல்லது கனடாவில் கோரிக்கைவிட உங்களுக்குத் தகுதி இல்லை என்றாலோ நீங்கள் கனடாவில் இருந்து அகற்றப்படுவீர்கள். உங்கள் புகலிடக் கோரிக்கை மீது இறுதி முடிவு எடுக்க நீண்டகாலம் ஆகலாம். கனடாவில் இருக்க நீங்கள் அனுமதிக்கப்படுவதற்கு உத்தரவாதம் இல்லை.

பிற குடியேற்ற வழிகள் குறித்து அறிந்துகொள்ளுங்கள்

கனடாவில் வாழ(opens in a new tab) , பணிபுரிய(opens in a new tab)  அல்லது படிக்க(opens in a new tab)  நீங்கள் வருவதற்கு வெவ்வேறு சட்ட வழிகள் உள்ளன. முன்கூட்டியே தகவல்களை அறிந்து வைத்திருங்கள்.

அடைக்கலம் கோருவது குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள். (opens in a new tab) 

Page details

Date modified: